வழிவிட மறுத்த பார்சல் வேன் டிரைவர்: சாவியை தூக்கிச்சென்ற வாலிபர்கள்: நடுரோட்டில் நடந்த பரபரப்பு

வழிவிட மறுத்த பார்சல் வேன் டிரைவர்: சாவியை தூக்கிச்சென்ற வாலிபர்கள்: நடுரோட்டில் நடந்த பரபரப்பு

ஹார்ன் அடித்த போது பார்சல் வாகனம் வழிவிடவில்லை என்னும் கோபத்தில் இளைஞர்கள் இருவர் செய்த செயலால் குமரி மாவட்டம், திருவட்டாறு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் இருந்து கோவைக்கு என்.ஜே.கே என்னும் தனியார் பார்சன் வேனில் பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்தனர். புலியிறங்கி பகுதியில் இந்த பார்சல் வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் டூவீலரில் இரு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஹார்ன் சப்தம் எழுப்பினர். அப்போது போக்குவரத்து நெருக்கடியாக இருந்ததால் பார்சல் வேன் டிரைவர் வழிவிடவில்லை.

இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர்கள் திருவட்டாறு காங்கரை பகுதியில் வைத்து பார்சல் வேனை முந்தியதோடு, டிரைவரை அவதூறாகத் திட்டினர். தொடர்ந்து வேனில் இருந்த சாவியையும் தூக்கிச் சென்றுவிட்டனர். இதனால் பார்சல் வேன் நடுவழியிலேயே நின்றது. இதனால் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவட்டாறு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அதே வாலிபர்கள் மீண்டும் பைக்கில் வந்து சாவியை தூக்கி வீசிவிட்டு சென்றனர். இதுகுறித்து வேன் டிரைவர் சுபாஸ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in