துப்பாக்கியால் சுட்ட துணை ராணுவப் படை வீரர்: குஜராத் தேர்தல் பணியில் இருந்த இரு வீரர்கள் மரணம்

துப்பாக்கியால் சுட்ட துணை ராணுவப் படை வீரர்: குஜராத் தேர்தல் பணியில் இருந்த இரு வீரர்கள் மரணம்
கோப்புப் படம்

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படை வீரர்கள் இருவர், சக வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் அம்மாநிலத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் போர்பந்தர் அருகே உள்ள துக்டா கோஸா எனும் கிராமத்தின் புயல் முகாம் ஒன்றில் தங்கியிருந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த வீரர் இனாவ்சாஷிங், சக வீரர்கள் மீது ஏகே-47 ரைபிளால் சுட்டார். இதில் தொய்பா சிங், ஜிந்தேந்திர சிங் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அனைவரும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போர்பந்தர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in