நிதி ஆயோக்கின் புதிய சிஇஓ: யார் இந்த பரமேஸ்வரன் ஐயர்?

பரமேஸ்வரன் ஐயர்
பரமேஸ்வரன் ஐயர்

நிதி ஆயோக்கின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.

நிதி ஆயோக்கின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பரமேஸ்வரன் ஐயர். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

1981 பேட்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர், காஷ்மீரில் பிறந்தவர். இவரது தந்தை இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். ஐஏஎஸ் பணியை உத்தர பிரதேசத்தில் தொடங்கிய பரமேஸ்வரன் ஐயர், தூய்மை, சுகாதாரப் பணிகளில் சிறப்பாகப் பங்களித்தவர். பிரதமர் மோடி தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

ஐஏஎஸ் பணியிலிருந்து 2009-ல் விருப்ப ஓய்வுபெற்ற இவர், கிராமப்புறப் பகுதிகளுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிபுணராக ஐநாவில் பணியாற்றியவர். குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர், கடந்த ஜூலை மாதம் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

2015-ல், மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக ‘நீதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. திட்டக்குழுவில் உறுப்பினர் - செயலர் என்ற பதவியில் ஒருவர் இருந்தார். புதிய அமைப்பில் தலைமைச் செயல் அதிகாரி அப்பதவியை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in