அசத்தல்... மாட்டு சாணத்திலிருந்து பேப்பர் தயாரித்து கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர்!

பீம் ராஜ் சர்மா
பீம் ராஜ் சர்மா

மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரித்து, அந்த காகிதங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரித்து, கோடிகளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த பீம்ராஜ் சர்மா.

“ஆரம்பத்தில் மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில் தொடங்கிய போது பலரும் என்னை கேலி செய்தனர். இப்போது நான் தயாரிக்கும் பொருட்கள் அமெரிக்கா வரை விற்பனையாகி கொண்டிருக்கின்றன” என்று பெருமிதத்தோடு பேச துவங்குகிறார்.

ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள சுதர்சன்புரா பகுதியைச் சேர்ந்தவர் பீம் ராஜ். அதே பகுதியில் பல ஆண்டுகளாக அச்சகம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கலாம் என்ற ஐடியா வந்துள்ளது. இதை செயல்படுத்திய அவருக்கு, முதலில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. காகிதத்தின் தரமே அதற்கு காரணம் என்று புரிந்து கொண்டவர், உடனடியாக அதற்கு தீர்வு கண்டு மீண்டும் தனது மாட்டுசாணத்தில் இருந்து தான் தயாரித்த காகிதத்தை சந்தைப்படுத்தினார்.

இம்முறை அவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சாணத்தில் இருந்து அவர் மேலும் டைரிகள், காலண்டர்கள், பைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்தார். பசுவின் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிப்பதற்கான காப்புரிமையையும் பெற்றார். இவரது காகித தயாரிப்பு ஆலையில் 20 ஊழியர்கள் வரை பணி புரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது.

சாணத்தில் தயாரித்த பொருட்கள்
சாணத்தில் தயாரித்த பொருட்கள்

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், பசுவின் சாணத்தை கிலோ 10 ரூபாய்க்கு வாங்குவதாகவும் பசுவின் சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்க முக்கிய நோக்கம், பசுவை தன்னிறைவாக ஆக்குவது தான் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரது பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்படுவதாக பீம்ராஜ் பெருமை பொங்க தெரிவிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in