'பாபநாசம்' படப்பாணியில் கணவனைக் கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்த மனைவி: 4 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

'பாபநாசம்' படப்பாணியில்  கணவனைக் கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்த மனைவி: 4 ஆண்டுகளுக்குப் பின்  வெளிச்சத்திற்கு வந்த உண்மை

தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று 'பாபநாசம்' படப்பணியில் புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்குப் பின் தன் காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் சவிதா. தனது கணவர் சந்திரவீர் 28.9.2018 அன்று முதல் காணாமல் போனதாக சிஹானி கேட் காவல் நிலையத்தில் சவிதா புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், சந்திரவீரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வழக்கை கிடப்பில் போட்டனர்.

ஆனால், காணாமல் போன சந்திரவீரர் சகோதர், தனது அண்ணி சவிதாவிற்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அருண் என்ற அணில்குமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்றும், அவர்களை இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் பல முறை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வழக்கை போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " திருமணத்திற்கு முன்பே சவிதா, அருணுடன் பழகியுள்ளார். திருமணத்திற்கும் பின்னும் அவர்களுக்கிடையே இருந்த உறவு நீடித்துள்ளது. எனவே, சந்திரவீரை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். எனவே, சந்திரவீரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதன் பின் சவிதாவின் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி சந்திரவீர் உடலைப் புதைத்துள்ளனர். அவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கொலை செய்யப்பட்ட சந்திரவீரின் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினர்.

'பாபநாசம்' படப்பாணியில் கட்டிய கணவனை காதலனோடு சேர்ந்து கொன்று வீட்டிற்குள்ளேயே மனைவி புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in