உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 441-வது ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

 தூய பனிமய மாதா பேராலய்ம்
தூய பனிமய மாதா பேராலய்ம்உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 441-வது ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு திருவிழா (ஜூலை 26) நாளை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு
நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வுஉலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 441-வது ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் தேதி தங்கத்தேர் பவனி விழா நடைபெறுகிறது. நாளை திருவிழா தொடங்க இருப்பதையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன் பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "11 நாட்கள் நடைபெற உள்ள பனிமய மாதா பேராலய திருவிழாவிற்காக ஆலயப் பகுதி முழுவதும் 50 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 டி.எஸ்பிக்கள் தலைமையில் 1400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் சீருடை இல்லாமல் 110 சிறப்பு பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் உயர்மட்ட கோபுரங்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆலயத்திற்கு வரக்கூடியவர்கள் வாகனங்களை நிறுத்த ஆலயம் அருகாமையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருவிழா எவ்வித அசம்பாதவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in