ஊராட்சி மன்றத் தலைவி தீக்குளித்து தற்கொலை: குடும்பப் பிரச்சினையால் விபரீத முடிவு

ஊராட்சி மன்றத் தலைவி தீக்குளித்து தற்கொலை: குடும்பப் பிரச்சினையால் விபரீத முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பதவி சம்பந்தமாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கீழக் கபிஸ்தலம், முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சுமதி(50). திமுகவைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பதவி சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி இருவருக்கும் பிரச்சினை நடந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சண்டையில் மனம் உடைந்த ஊராட்சி மன்ற தலைவி சுமதி மாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார் என சொல்லப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரனும் படுகாயம் அடைந்தார். இருவரும் மீட்கப்பட்ட கும்பகோணம் அரசு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் ஊராட்சி மன்ற தலைவி சுமதி நேற்று மாலை உயிரிழந்தார்.

ஊராட்சி மன்ற தலைவி சுமதியின் கணவர் குணசேகரன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in