அலுவலகத்திற்குள் புகுந்த பஞ்சாயத்து உறுப்பினர்… கையைப் பிடித்து இழுத்து பெண் பிடிஓவிற்கு முத்தம்: வைரல் வீடியோவால் பரபரப்பு

அலுவலகத்திற்குள் புகுந்த பஞ்சாயத்து உறுப்பினர்… கையைப் பிடித்து இழுத்து பெண் பிடிஓவிற்கு முத்தம்:  வைரல் வீடியோவால் பரபரப்பு

கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து வட்டார வளர்ச்சி பெண் அலுவலரின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்த பஞ்சாயத்து உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ளது ஜே.சி.புரா கிராம பஞ்சாயத்து அலுவலகம். இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக கோகிலா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பஞ்சாயத்து உறுப்பினர் பிரசன்ன குமார் என்பவர், அலுவலகத்திற்குள் புகுந்து கோகிலாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளார். ஆனால், அவரிடமிருந்து பிடியை விடுவிக்க கோகிலா முயன்றார். ஆனால், அதை மீறி அவரை இழுத்து பிரசன்னா குமார் முத்தம் கொடுத்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in