ஒன்றரை மாதங்களுக்கு பின் திறந்த பாம்பன் தூக்குப்பாலம்; கடந்து சென்ற கப்பல்கள்: ரசித்த சுற்றுலாப்பயணிகள்

ஒன்றரை மாதங்களுக்கு பின் திறந்த பாம்பன் பாலம்
ஒன்றரை மாதங்களுக்கு பின் திறந்த பாம்பன் பாலம் கடந்து சென்ற கப்பல்கள்

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம் வழியாக அடுத்தடுத்து கப்பல்கள் கடந்து சென்றன.

தமிழக கடற்பரப்பு- ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் பங்காற்றி வருகிறது. பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கோவா, கேரளா, அந்தமான், விசாகபட்டினம் உள்ளிட்ட கடற்பகுதிகளுக்கு கப்பல்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், பாம்பன் தூக்குப்பாலத்தில் 2022 டிச. 23 அதிகாலை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் இன்று அனுமதியளித்தனர். இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது.

இதன் வழியாக மங்களூரு துறைமுகத்தில் இருந்து பைலட் கப்பல், சென்னையில் இருந்து கேரளாவுக்கு சர்வே கப்பல், கோவா செல்ல மிதவை கப்பல் என 3 கப்பல்கள் கடந்து சென்றன. அடுத்தடுத்துச் சென்ற இக்கப்பல்களை சாலை பாலத்தில் நின்று சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in