பழனி கோயில் குடமுழுக்கில் பங்கேற்க வேண்டுமா?: ஜனவரி 18-ல் முன்பதிவு செய்யலாம்!

பழனி கோயில் குடமுழுக்கில் பங்கேற்க வேண்டுமா?: ஜனவரி 18-ல் முன்பதிவு செய்யலாம்!

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கான முன்பதிவு வரும் 18-ல் தொடங்கஉள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு கடந்த 2006-ல் நடந்தது. கடந்த 2018-ல் நடத்த வேண்டிய குடமுழுக்கு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி கோயிலின் குடமுழுக்கு விழாவை நடப்பாண்டு நடத்த கோயில் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதன்படி குடமுழுக்கு திருப்பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இணையத்தில் பதிய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோயில் இணையமான www.palanimurugam.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in என்ற வலதள முகவரியில் ஜன.18, 19, 20 தேதிகளில் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து, மொபைல் போன் எண், இ-மெயில் ஆகிய விவரங்கள் அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in