பழனி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கலந்துகொள்வது எப்படி? - புதிய வழிமுறை

பழனி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கலந்துகொள்வது எப்படி? - புதிய வழிமுறை

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள இணைய வழி முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 16 ஆண்டுகளுக்குப் பின்பு பழனி முருகன் கோயிலில் இப்போது கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொள்வோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு www.palanimurukan.hrce.gov.in என்ற இணையதளத்தில் வரும் 18 -ம் தேதி முதல் 20 -ம் தேதிவரை 3 நாள்கள் முன்பதிவு செய்யலாம்.

இதற்கு அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களில் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பேங்க் பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும். மேலும், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வானவர்களுக்கு 22 -ம் தேதி மெயில் மூலமாகவும், செல்போன் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். இந்த மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் கிடைத்தவர்கள் பழனி வேலவன் விடுதியில் பதிவு செய்ய சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா தரிசன சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in