பழநி முருகன் கோயிலில் ஜன.27-ல் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ ஏற்பாடு

பழநி முருகன் கோயிலில் ஜன.27-ல் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ ஏற்பாடு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டரில் மலர் தூவ கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலதண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா ஜன.27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து திருப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோயில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

குடமுழுக்கு விழாவில் 2 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டணமில்லா இணையதள பதிவு நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜன.23-ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதற்காக, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா நாளில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. ஜன.27-ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் நிறைவுக்கு பின் புனித நீர் நிரப்பிய கலசங்கள் ராஜகோபுரம், தங்க கோபுரம் கொண்டு செல்லப்பட்டு குட முழுக்கு நடைபெற உள்ளது.

அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மீது புனித நீர் ஸ்பிரிங்லர் மூலம் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in