பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா கடந்த 2006-ம் ஆண்டில் நடந்தது. ராஜகோபுர கோயில்களுக்கு 12 ஆண்டுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற ஐதீகப்படி, கடந்த 2018-ம் ஆண்டில் நடத்த வேண்டிய குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து பழநி தண்டாயுதபாணி கோயிலின் குடமுழுக்கு விழாவை நடப்பாண்டு நடத்த கோயில் அறங்காவலர் குழு முடிவு செய்தது.

இதையடுத்து முடுக்கி விடப்பட்ட குடமுழுக்கு திருப்பணிகள் தற்போது மும்முரம் அடைந்துள்ளன. ஜன. 27-ம் தேதி பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க இணையத்தில் பதிய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்கப்படுவர் என பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in