பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காயம்: 3-ம் இடம் பிடித்தவர் மருத்துவமனையில் அனுமதி

பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காயம்: 3-ம் இடம் பிடித்தவர் மருத்துவமனையில் அனுமதி

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் 3-ம் இடம் பிடித்த மற்றொரு வீரர் காயமடைந்தார்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9 காளைகளை பிடித்து மூன்றாமிடத்தில் இருந்த பாலமேடு மாடு பிடிவீரர் அரவிந்த்ராஜன், காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் 11 காளைகளை பிடித்து மூன்றாமிடத்தில் இருந்த மற்றொரு வீரரான சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசனை காளை முட்டியது. படுகாயங்களுடன் தமிழரசன், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்கெனவே 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 இடம் பிடித்த வீரர்களில் அரவிந்த்ராஜன் உயிரிழப்பு, தமிழரசன் காயம் அடைந்த சம்பவம் மாடுபிடி வீரர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in