மார்பில் குத்திய கொம்பு; 3-வது இடத்திலிருந்த மாடுபிடி வீரர் பலி: பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்

மார்பில் குத்திய கொம்பு; 3-வது இடத்திலிருந்த மாடுபிடி வீரர் பலி: பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியில் 3-வது இடத்தில் இருந்த மாடுபிடி வீரர் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன்
மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் மதுரையைச் சேர்ந்த அரவிந்த் ராஜன் என்பவர் மாடு பிடிக்கும் போட்டியில் களமிறங்கினார். இவர் ஆடுகளத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்டதோடு 9 காளைகளை பிடித்து 3-வது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் பாய்ந்து வந்த காளை ஒன்றை மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் அடக்க பாய்ந்தார். அப்போது அவரது மார்பு பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி கிழித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அரவிந்த்ராஜன் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனுடைய திருச்சி, சூரியூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பார்வையாளராக வந்த புதுக்கோட்டை மாவட்டம், கண்ணாகோன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் மீது காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in