
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து களமிறங்கிய வீரர்கள் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து, 2-ம் சுற்று போட்டி நடந்து வருகிறது. காலை 9.15 மணி நிலவரப்படி 135 காளைகள், காலை 10 மணி நிலவரப்படி 215 காளைகள், 11 மணி நிலவரப்படி, 305 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் முட்டியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இரண்டாவது சுற்றில் சீருடையை மாற்றி ஆள் மாறாட்டம் செய்த நீல நிற பனியன் அணிந்த 7 பேர், ரோஸ் கலர் பனியன் அணிந்த ஒருவர் என 10 பேர் ஆள் மாறாட்டம் செய்து களமிறங்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த 10 வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.