சீறிப்பாய்கிறது காளைகள்; அடக்கும் காளையர்கள்: விறுவிறுப்புடன் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி

சீறிப்பாய்கிறது காளைகள்; அடக்கும் காளையர்கள்: விறுவிறுப்புடன் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. சீறி வரும் காளைகளை காளையர்கள் அடங்கி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்து முடிந்தது. இந்த நிலையில், புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்ட இன்று மஞ்சள்மலை ஆற்று மைதான திடலில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டுப்போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து 750 முதல் ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது. 335 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற பனியன் அணிந்து மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. சீறிவரும் காளைகளை காளையர்கள் அடக்கும் காட்சி அனைவரையும் பிரமிக்கவைக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in