குஜராத் கடற்பகுதியில் படகுடன் நுழைந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது: ஆயுதம், போதைப் பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் படகுடன் நுழைந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது: ஆயுதம், போதைப் பொருள் பறிமுதல்!

இந்திய கடற்பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை, இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். அப்படகிலிருந்த 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்து, போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை ட்விட்டர் பதிவில், குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடற்பகுதியில் 10 பேருடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்து 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடி மருந்துகள், 40 கிலோ போதைப்பொருள் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 300 கோடி பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in