இந்தியாவிடம் மன்றாடும் பாகிஸ்தான்: டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் வார்த்தை யுத்தம்

இந்தியாவிடம் மன்றாடும் பாகிஸ்தான்: டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் வார்த்தை யுத்தம்

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு அரசு மீது மிகவும் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர்.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவுடன் நடந்த போர்களினால் பல பாடங்களை கற்றுக் கொண்டோம் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது.., "பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம். அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.

நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன. போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. எனவே இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும். இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்" என்று அவர் கூறினார்.

தற்போது டிவிட்டரில் இது டிரெண்ட் ஆகி வருகிறது. இந்திய மக்கள், பாகிஸ்தான் நாடு இந்தியாவிடம் மன்றாடுகிறது என ட்வீட் செய்து வருகின்றனர். பாஜக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் பாகிஸ்தானில் நிலை குறித்தும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது எனவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமர் மோடியையும் புகழ்ந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானை எதுவும் செய்ய முடியவில்லை மோடியின் ஆட்சியில் பாகிஸ்தான் இந்தியாவை கண்டு பயப்படுகிறது எனவும் டிவிட்டரில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in