பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக்கொலை: பஞ்சாப் எல்லையில் பதற்றம்

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக்கொலை: பஞ்சாப் எல்லையில் பதற்றம்

பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையின் அருகே இன்று காலை 8 மணியளவில் இந்த ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் பக்கத்திலிருந்து எல்லை வேலியை நெருங்கிய ஆயுதம் ஏந்திய சந்தேகத்திற்குரிய நபரின் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்புப் படை கவனித்தது. அதன்பிறகு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமீப காலமாக பஞ்சாப் எல்லையில் ஆளில்லா ட்ரோன்கள் அதிகளவில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றன. அதனை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணித்து, சுட்டு வீழ்த்தும் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in