செல்போனை அடகு வைத்து ரம்மி விளையாட்டு... தகராறு செய்த மனைவி: உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

செல்போனை அடகு வைத்து ரம்மி விளையாட்டு... தகராறு செய்த மனைவி: உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பெயின்டர் தற்கொலை செய்து கொண்டார். தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகளால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள்(37). பெயின்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி மூழ்கிபோன பெருமாள் அதில் அதிக பணத்தை இழந்து கடனாளியானார். கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான பெருமாள், அவரது மனைவி வரலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று பெருமாள் தனது செல்போனை, அடகு வைத்து அதில் வந்த பணத்தை சூதாட்டத்தில் தோற்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த கணவர் பெருமாளிடம் மனைவி வரலட்சுமி இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெருமாள் அறைக்கு தூங்க சென்றார். வரலட்சுமியும் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல் வரலட்சுமி எழுத்து பார்த்த போது கணவர் பெருமாள் அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே வரலட்சுமி உறவினர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த பெருமாளின் அண்ணன் பாலமுருகன் கயிற்றை அறுத்து, உடலை கீழே இறக்கியதுடன் மணலி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த மணலி போலீஸார் பெருமாள் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை பறிகொடுத்த விரக்தியில் சிறார் முதல் பெரியவர் வரை தற்கொலை செய்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து அறங்கேறி வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், குடும்ப பெண்களும், தாய்மார்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in