ஒவைசி 2 தொகுதிகளில் வாக்காளராக உள்ளார்: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

ஒவைசி 2 தொகுதிகளில் வாக்காளராக உள்ளார்: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி நிரஞ்சன் புகார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் நிரஞ்சன், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஜனவரி 5-ம் தேதி எழுதிய கடிதத்தில், அசாதுதீன் ஒவைசி, தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிராக ராஜேந்திர நகர் மற்றும் கைரதாபாத் ஆகிய இரு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் தெளிவான பொறுப்பற்ற தன்மையையும், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தேர்தல் எந்திரத்தின் பொறுப்பற்ற தன்மையையும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாகக் கூறிய இரு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலையும் அவர் இக்கடிதத்தில் இணைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in