
பிற மாநில மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் குவிக்கப்படுவதை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கேரள மாநில பல்லுயிர் மருத்துவ கழிவுகள் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமாரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் குவிக்கப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாக தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.
பிற மாநில மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் குவிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2020-2022 ஆண்டுகளில் தென்காசியில் 9, கோவையில் 4 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கழிவுகள் குவிக்கப்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, தமிழகத்தில் பிற மாநில மருத்துவக்கழிவுகள் குவிக்கப்படுவதை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.