ஒரு பார்சலில் ஒரிஜினல்; ஒரு பார்சலில் டூப்ளிகேட்: சென்னை வாடிக்கையாளரை பதறவைத்த அமேசான்

ஒரு பார்சலில் ஒரிஜினல்; ஒரு பார்சலில் டூப்ளிகேட்: சென்னை வாடிக்கையாளரை பதறவைத்த அமேசான்

பிரபல துணி நிறுவனங்களின் பெயரில் போலியான நிறுவனத் துணிகளை அமேசான் நிறுவனம் ஆன்லைனில் விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்காட் ஆகிய விற்பனை இணையதளங்கள் வாடிக்கையாளர்களை கவர கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிக் பில்லியன் டே என்ற பெயரில் இரண்டு நிறுவனங்களும் பல சலுகைகள், தள்ளுபடிகளை, அறிவித்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. பிரபல நிறுவனத்தின் பொருட்கள் சலுகை விலைகளில் கிடைப்பதால் பொதுமக்களும் பலர் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணா என்பவர் அமேசான் இணையதளத்தில் பிரபல துணி நிறுவனமான வேன்ஹுசன் நிறுவனத்தில் இரண்டு டிராக் பேண்ட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் அமேசான் நிறுவன ஊழியர் அதை டெலிவரி செய்துள்ளார். அமேசான் டெலிவரி ஊழியர் கொடுத்துச் சென்ற பேக்கேஜை திறந்து பார்க்கும்போது கிருஷ்ணா ஆர்டர் செய்த இரண்டு வேன்ஹுசன் டிராக் பேண்ட்டுகள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்கும் பொழுது ஒரு பேக்கேஜில் வேன்ஹுசன் கம்பெனியின் ஒரிஜினல் துணிகளும், மற்றொரு வேன்ஹுசன்பேக்கேஜில் போலியான நிறுவனத்தின் துணிகளும் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே கிருஷ்ணா இந்த மோசடி தொடர்பாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, பணத்தை திருப்பித் தருவதாகவும் பொருட்களை மாற்றித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாடிக்கையாளரை மோசடி செய்ததாக ஒத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது போன்று பிரபல இணையதளங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் பிரபல நிறுவனங்களின் பொருட்களை வாங்கும் பொழுது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in