இன்ஸ்பெக்டர் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: வக்கீலைத் தாக்கியதால் மனித உரிமை ஆணையம் அதிரடி

சீர்காழி காவல் நிலையம்
சீர்காழி காவல் நிலையம்

சீர்காழியில் நடைபெற்ற பாஜக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோதலின்போது காவல்துறை ஆய்வாளரால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விசிகவினர் திரண்டு வந்து பாஜகவினரைத் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதலாக மாறியது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன் என்பவரை அப்போதைய சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது பொதுமக்கள் மத்தியில் தாக்குதல் நடத்தி கைது செய்தார். இந்நிலையில் வேலு குபேந்திரன் இதுகுறித்து மனித உரிமை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதில் நடைபெற்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில் ' இந்த தாக்குதல் மனித உரிமைக்கு எதிரானது, தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், அத்தொகையினை தமிழக அரசு சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுத்துவிட்டு காவல் ஆய்வாளரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் இந்த தாக்குதல் ஈடுபட்ட ஆய்வாளர் சிங்காரவேலு மீது துறை ரீதியான குற்றவியல் நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in