அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! முன்கூட்டியே சம்பளம் வழங்க உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! முன்கூட்டியே சம்பளம் வழங்க உத்தரவு

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி சம்பளத்தை முன்கூட்டியே பெறலாம் என நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிராவில் மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தை செப்டம்பர் 27ம் தேதி வரை எடுக்கலாம். மேற்கூறிய மாநிலங்களில் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள் இச்சலுகையைப் பெற்வார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 27தேதியிலும் அவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளின்படி முன்கூட்டியே வழங்கப்படும் என்று நிதிமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவையான நடவடிக்கைகளுக்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இந்த அறிவுறுத்தல்களை கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தங்கள் அலுவலகங்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல, போனஸ் தொகைக்கு தகுதியற்ற ஊழியர்களுக்கு சிறப்பு விழாக் கொடுப்பனவாக ரூ.2,750 கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போனஸ் பெற்ற ஒப்பந்தத் திட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து ஊழியர் பிரிவுகளுக்கும் இந்த ஆண்டு அதே விகிதத்தில் போனஸ் கிடைக்கும்.

கேரள மாநில அரசின் இந்த அறிவிப்பால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 13 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in