சாப்பிட வந்த பெண்ணுக்கு ஓட்டல் கொடுத்த ஷாக்: ஆர்டர் செய்த பூரியில் மட்டுமின்றி மாவிலும் நெளிந்த புழுக்கள்!

சாப்பிட வந்த பெண்ணுக்கு ஓட்டல் கொடுத்த ஷாக்: ஆர்டர் செய்த பூரியில் மட்டுமின்றி மாவிலும் நெளிந்த புழுக்கள்!

சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் பூரி மற்றும் மாவில் புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் 2 நாட்களுக்கு ஓட்டலை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி(33). இவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் கோயம்பேட்டில் உள்ள மாலுக்குச் சென்றார். இதன் பின் நம்ம வீடு வசந்தபவன் ஓட்டலில் சாப்பிடச் சென்றார். அங்கு ஹேமாவதி பூரி ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவர் பூரியைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது ஹேமாவதி பூரியை எடுத்து பார்த்த போது அதில் புழு ஓன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து ஓட்டல் ஊழியரிடம் கேட்ட போது, அவர் தவறுதலாக வந்து விட்டது. வேறு பூரி கொண்டு வருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.


இதனால் கோபமடைந்த ஹேமாவதி உடனே ஓட்டல் சமையலறைக்குச் சென்று பாரத்த போது அங்கு பூரி சுடுவதற்காக வைத்திருந்த மாவிலும் புழுக்கள் நெளிவதைக் கண்டு மிரட்டு போனார். உடனடியாக அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி பின்னர் உணவு பாதுகாப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணாநகர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், ஒட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அத்துடன் புழு இருந்த பொருட்களைப் பறிமுதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓட்டலை திறக்கக் கூடாது என உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதற்கான நோட்டீஸை வழங்கினர்.

சமீப காலமாக பிரபலமான உணவகங்களான சேலம் ஆர்.ஆர்.பிரியாணி, ஆசிப், வசந்தபவன் உள்ளிட்ட பல ஓட்டல்கள் தரமில்லாத உணவு கொடுத்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் நம்ம வீடு வசந்தபவனும் சேர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in