திருநெல்வேலி எஸ்.பியை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு: என்ன காரணம்?

திருநெல்வேலி எஸ்.பியை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு: என்ன காரணம்?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையமானது திருநெல்வேலி எஸ்.பி சரவணனைக் கைது செய்து ஆணையம் முன்பு ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் தன் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்ததாகவும், அதை மீட்டுத்தருமாறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையம், எஸ்.பிக்கு அறிவுறுத்தி இருந்தது. ஜூன் 10-ம் தேதியே அறிக்கை கேட்கப்பட்ட நிலையில் நெல்லை எஸ்.பி சரவணன் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தொடர்ந்து அவகாசம் அளிக்கப்பட்டுவந்தது. அக்டோபர் 10, நவம்பர் 30 ஆகிய தேதிகளிலும் இதேபோல் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போதும் எஸ்.பி ஆஜர் ஆகவில்லை.

மேலும் அவர் ஆஜர் ஆகாததோடு அறிக்கையும் தராமல் ஏடிஎஸ்பியை அனுப்பி வைத்திருந்தார். இதனால் ஆணையமானது, ‘’திருநெல்வேலி எஸ்.பி சரவணனை கைது செய்து, வரும் 28-ம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு தென் மண்டல ஐ.ஜிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 500 ரூபாய் எஸ்.பிக்கு அபராதம் விதித்துள்ள ஆணையம், அந்த அபராதத்தை வசூலிக்கும் பொறுப்பை நெல்லை ஆட்சியர் எடுக்க வேண்டும் எனவும், ஜாமீனில் விடக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in