செயல்படாத 1,256 சங்கங்களை கலைக்க உத்தரவு: எங்கே தெரியுமா?

செயல்படாத 1,256 சங்கங்களை கலைக்க உத்தரவு: எங்கே தெரியுமா?
Picasa

புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு செயல்படாமல் இருக்கும் சங்கங்களை  கலைக்க  புதுச்சேரி மாநில  சங்கங்களின்  பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நூற்றுக்கணக்கான  சங்கங்கள் தொடங்கப்பட்டு  சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி  பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் அவை சிறிதும்  செயல்படாமல் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அப்படி செயல்படாமல் இருக்கும் சங்கங்கள்  பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.  அதில் புதுவை மாநிலத்தில் மொத்தம் 1,256 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டதோடு  செயல்படாமல் பெயரளவுக்கு மட்டுமே இருப்பது தெரியவந்தது.

சங்கங்களின் விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தி வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்கள் ஒப்புதல் பெற வேண்டும்.  இதைக்கூட செய்யாமல் இந்த சங்கங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த சங்கங்களை கலைக்க,  சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in