செல்போன், கேமராவை டெலிவரி செய்ய வந்த ஊழியர்: பேசிக் கொண்டிருந்தபோது திருடிச் சென்ற கும்பல்

செல்போன், கேமராவை டெலிவரி செய்ய வந்த ஊழியர்: பேசிக் கொண்டிருந்தபோது திருடிச் சென்ற கும்பல்

செல்போன், விலை உயர்ந்த கேமராக்களை இணைய வழியில் ஆர்டர் செய்துவிட்டு அவற்றை நூதனமுறையில் திருடிய மர்மக் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள போலி முகவரியைக் கொண்டு மர்மநபர்கள் சிலர் மூன்று விலை உயர்ந்த செல்போன், கேமராவை ஆர்டர் செய்தனர். இது மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வந்தது. இதில் டெலிவரி செய்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. இதனால் டெலிவரி செய்ய டெலிவரிமேன் அஜித் என்பவர் பார்சல்களை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது அந்த போலியான முகவரியில் தயாராக இருந்த வாலிபர்கள் ஒருவர் அஜித்திடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீர் என அங்குவந்த ஒரு வாலிபர் ஆர்டர் செய்து வந்திருந்த செல்போன் மற்றும் கேமராக்களைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார். அஜித் அவரின் பின்னால் ஓட அதனிடையே இன்னொரு வாலிபரும் தப்பியோடிவிட்டார்.

அஜித் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் இந்த மோசடியில் ஈடுபட்டது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், அருவிக்கரை பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணா, அமித்குமார் ஆகியோர் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை போலீஸார் கேரளத்திற்கு சென்று இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in