தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார் ஓபிஎஸ்: எதற்காக தெரியுமா?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு உதவுவதற்காக தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியை ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளருக்கு தனது மகன்கள் ரவீந்திர நாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோரின் வங்கிக்கணக்கில் இருந்து தலா ரூ.25 லட்சம் மதிப்புள்ள வரைவோலையை ஓபிஎஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபோது, என் குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என 29-04-22 அன்று நான் அறிவித்தேன். இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் நினைவாக என் மூத்த மகனும், எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் இளையமகன் ஜெயபிரதீப் ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து தலா 25 லட்ச ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. இந்த தீர்மானத்தில் பேசிய அப்போதையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், “அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதியுடன் சேர்த்து நான் சார்ந்துள்ள குடும்பம் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in