நட்டா உடன் ஓ.பி.எஸ் சந்திப்பு: அதிமுக முகாமில் அடுத்தது என்ன?

நட்டா உடன் ஓ.பி.எஸ் சந்திப்பு: அதிமுக முகாமில் அடுத்தது என்ன?

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அண்மையில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சியின் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பொறுப்பேற்கிறார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குஜராத் சென்றுள்ளார். அப்போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. ஓ.பி.எஸ்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்விற்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிகழ்வில் பங்கேற்க ஓ.பி.எஸ் குஜராத் சென்றிருந்தார். அங்கு வைத்து நட்டாவை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.

ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே அழைக்கப்பட்டிருந்த நிலையில், குஜராத் முதல்வர் பதவியேற்புக்கு ஓ.பி.எஸையும் அழைத்ததை குறிப்பிடத்தக்க நகர்வாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். மேலும், நட்டா - ஓபிஎஸ் சந்திப்பின்போது பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவை, அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கும் விரைவில் வித்திடும் என்றும் அவர்கள் குதூகலித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in