மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... எதிர்கட்சிகள் அதிரடி திட்டம்!

மணிப்பூர் விவகாரம்...மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்
மணிப்பூர் விவகாரம்...மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்

26 கட்சிகள் அடங்கிய மெகா ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் (இந்தியா) அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டரில், "மணிப்பூரில் 83 நாட்கள் இடைவிடாத வன்முறைக்கு பிரதமர் பாராளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். மணிப்பூர் வன்முறை குறித்து மோடி அரசிடம் இருந்து இந்தியா பதில் கேட்கிறது. வடகிழக்கில் நிலைமை பலவீனமாக உள்ளது. மணிப்பூர் வன்முறையின் விளைவுகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவுகிறது. இது நமது கொந்தளிப்பான எல்லை மாநிலங்களுக்கு நல்லதல்ல. பிரதமர் மோடி தனது ஈகோவைக் களைந்து, மணிப்பூர் சம்பவத்தில் நாட்டை நம்பிக்கை பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டும். நிலைமையை மேம்படுத்த, மணிப்பூரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்” என்றார்

இந்த சூழலில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முடிவில் உள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகளின் வியூகம் ராஜ்யசபாவிலும் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்தை தொடங்குவதற்கு அரசாங்கத்தை நிர்பந்திக்க, நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல நாட்கள் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in