தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிவைப்பு?: அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிவைப்பு?: அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் சற்றும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போகலாம் என தெரிகிறது.  இதுகுறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கத்திரி வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவன டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் தமிழக அரசியல் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி திறக்க இருந்த பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைத்து ஜூன் 7-ம் தேதியன்று திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

ஆனால் தென்மேற்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையிலும் தமிழகத்தில் வெயில் இன்னும் குறைந்தபாடில்லை நேற்று முன்தினம் 17 மாவட்டங்களிலும் நேற்று 18 மாவட்டங்களிலும் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை மேலும் தள்ளி வைக்கலாமா? என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார். அதற்கு பிறகு பள்ளி திறப்பது தள்ளி வைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அநேகமாக அடுத்த வாரம் திங்கள்கிழமை அதாவது 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in