சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு: இணையவழி முன்பதிவு கட்டாயம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு: இணையவழி முன்பதிவு கட்டாயம்

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்றுமாலை திறக்கபட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கேரள தேவசம்போர்டு பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு ஐயப்பன். நைஸ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு கார்த்திகை மாதத்தைக் கணக்குவைத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, மாலை அணிந்து செல்வது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.தற்போது தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கரோனா கட்டுப்பாட்டு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

கார்த்திகை மாத தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது இன்று மாலையில் திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்துவைத்தார்.

தொடர்ந்து பதினெட்டாம்படி வழியாக மேல்சாந்தி இறங்கிச் சென்று கோயில் முன்பு உள்ள ஆழிகுண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது. சபரிமலை ஐயப்ப தரிசனத்திற்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்த்து ஏனையவர்களுக்கு இணையவழி முன்பதிவு கட்டாயம் என கேரள தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதேபோல் நிலக்கல் உள்பட 12 மையங்களில் இணையவழியில் புக்கிங் செய்யாதவர்களுக்கு, ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in