போட்டிப்போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டனர்; பறிபோன மாணவியின் உயிர்: ஊட்டி அரசுப்பள்ளியில் அதிர்ச்சி

உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவி போட்டிப்போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டனர்; பறிபோன மாணவியின் உயிர்: ஊட்டி அரசுப்பள்ளியில் அதிர்ச்சி
Updated on
1 min read

போட்டிப்போட்டுக்கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஊட்டியில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ம் தேதி போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்டதாக நான்கு மாணவிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஊட்டியில் தனியார் காட்டேஜில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்த சலீம் என்பவரின் மகள் ஜெய்பா ஃபாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஜெய்பா ஃபாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஊட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒருமுறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in