ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையானை இனி தரிசிக்க முடியும்: புதிய உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையானை இனி தரிசிக்க முடியும்: புதிய உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற முடியாது என்று கோயில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இப்படி முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக வந்து கட்டணமில்லா தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்றால், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ஏதாவதொரு அடையாள அட்டையை சமர்பித்து, இதுவரை டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையில் இருந்தது.

ஆனால் இந்த நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதுவரை ஆதார் இல்லாத பக்தர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற்று வந்தனர். அந்த நடைமுறை தற்போது நீக்கப்பட்டு, ஆதார் எண் மட்டுமே அடையாள ஆவணம் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், “300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in