உருமாறிய கரோனாவிற்கு இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் பாதிப்பு? - மத்திய அமைச்சர் விளக்கம்

உருமாறிய கரோனாவிற்கு இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் பாதிப்பு? - மத்திய அமைச்சர் விளக்கம்

உருமாறிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் நான்குபேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில், “உருமாறிய கரோனா வைரஸால் இந்தியாவில் நான்குபேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான், சீனா, பிரேசில், தென்கொரியாவோடு ஒப்பிட்டால் இது குறைவு தான். அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது.”என்றார்.

இதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொடுத்த பேட்டியில், “இன்று காலையில் இருந்து ஐப்பான், தைவான் உள்பட பத்துக்கும் அதிகமான நாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் நேரடியாக இல்லாமல், இணைப்பு விமானங்களின் வழியாக தமிழகத்திற்குள் வருவோருக்கும் 100 சதவீதம் சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.”என்றார்.

அதேநேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in