`ஒரு மார்க் கேள்வித்தான் கஷ்டமாக இருந்தது; மற்றபடி ஓகே தான்’- தமிழ் முதல்தாள் தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவிகள் மகிழ்ச்சி!

மாணவிகள்
மாணவிகள்’ஒரு மார்க் கேள்வித்தான் கஷ்டமாக இருந்தது; மற்றபடி ஓகே தான்’- தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவர்கள் மகிழ்ச்சி!

இன்று நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வில் 1 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மற்ற அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்ததாகவும் மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடந்தது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்.

முதல் நாளான இன்று தமிழ் முதல்தாள் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். வினாத்தாள் குறித்து மாணவிகள் கூறுகையில், ’’தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் 1 மதிப்பெண் கேள்விகள் சற்றுக்கடினமாக இருந்தது. புத்தகம் முழுவதையும் படித்திருந்தால் மட்டுமே முழுமையான மதிப்பெண்னை பெற முடியும். மற்ற கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாத சில பொதுவான கேள்விகள் வந்தது. அது மிகவும் எளிமையாக இருந்தது. நிச்சயம் அனைவரும் பாஸ் ஆகலாம். பாடப்புத்தகத்தை முழுவதுமாக படித்திருந்தால் மட்டுமே முழுமையான மதிப்பெண் பெற முடியும்’’ என மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in