20 கோடியை இழந்த ஐசிசி?; ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை: நெட்டிசன்கள் கிண்டல்

20 கோடியை இழந்த ஐசிசி?; ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை: நெட்டிசன்கள் கிண்டல்

ஆன்லைன் மோசடி கும்பலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 20 கோடி ரூபாயை இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக தனி நபர்களையும் நிறுவனங்களையும் குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசையை காட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பணப்புழக்கம் தற்போது குறைந்துவிட்ட நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. பொதுமக்கள் ஏமாந்து வரும் சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆன்லைன் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் ஐசிசியிடம் பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஐசிசி கருத்து தெரிவிக்காத நிலையில், ஐசிசி-யிடமே ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசைக் காட்டிவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in