ஆன்லைன் கடன் செயலி கும்பல் மிரட்டல்: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

ஆன்லைன் கடன் செயலி கும்பல் மிரட்டல்: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

ஆன்லைன் கடன் செயலி கும்பல் மிரட்டல் விட்டதால் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த ஆவணங்களுமின்றி சில நிமிடங்களிலேயே பணம் கடனுக்குக் கிடைப்பதால் ஆன்லைன் கடன் செயலிலை பலர் நாடுகின்றனர். எந்த ஆவணமும் இல்லை என்றாலும், கடன் தொகையைத் திருப்பி செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி விதிக்கப்படுவதுடன், கடன் வாங்கியவரை ஆபாசமாக புகைப்படத்தில் சித்தரித்து அவரது நண்பர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பும் ஆன்லைன் கடன் செயலிகளும் உள்ளன.

சென்னையில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தாத பாஜக பிரமுகர் படத்துடன் பாஜக பெண் தலைவர் படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆன்லைன் செயலி நிறுவனம் மீது போலீஸில் புகாரும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் கடன் செயலி கும்பல் மிரட்டலால் ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டா(33). ஓட்டுநரான இவர் கடன் செயலி மூலம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அவர் கடன் செலுத்துவதில் காலதாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கடன் செயலி கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் மனமுடைந்த மணிகண்டா நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியவர்கள் மிரட்டல் இருந்தால் தைரியமாக புகார் அளியுங்கள் என்று ஆந்திரா காவல் துறை வலியுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in