இளைஞர்களின் ஆன்லைன் கேமிங் மோகத்துக்கும், மலேரியா மரணங்களுக்கும் என்ன தொடர்பு? - மேகாலயா அதிர்ச்சி

இளைஞர்களின் ஆன்லைன் கேமிங் மோகத்துக்கும், மலேரியா மரணங்களுக்கும் என்ன தொடர்பு? - மேகாலயா அதிர்ச்சி
Updated on
2 min read

மேகாலயா மாநிலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆன்லைன் கேமிங் மோகத்துக்கும், அவர்களின் மலேரியா மரணத்துக்கும் ஆச்சரிய தொடர்பை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேகாலயா மாநில சுகாதாரத் துறை, இளைஞர்களிடையே அதிகரிக்கும் மலேரியா தொடர்பான இறப்புகளுக்கும், அவர்களின் ஆன்லைன் கேமிங் மோகத்துக்குமான தொடர்பை அடையாளம் கண்டுள்ளது. 30 வயதிற்குட்பட்டோரின் மலேரியா மரணங்களின் திடீர் அதிகரிப்பை அடுத்து, அதிகாரிகளின் ஆய்வில் இந்த தொடர்பு வெளிப்பட்டுள்ளது. மரணமடைந்தோருக்கு அப்பாலும், மலேரியா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அங்கே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

கொசுக்கடி
கொசுக்கடி

"காய்ச்சல் பற்றி தாமதமாகப் புகாரளிப்பது, சுய மருந்துவ முயற்சியிலான சிகிச்சை நடைமுறைகள் ஆகியவை பெரும்பாலான நிகழ்வுகளில் இறப்புக்கு காரணமாகின்றன" என்று மேகாலயாவின் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருமான ராம் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இளைஞர்கள் மாலை நேரங்களில் மொபைல் நெட்வொர்க்குகள் கிடைக்கும் வனாந்திரங்களுக்கு செல்வது, இந்த வயதினரை கொசுக்கடிக்கு அதிகம் ஆளாக்கியுள்ளது. மலேரியா தொடர்பாக செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றிய விழிப்புணர்வு இன்மையாலும் இவ்வாறு நேர்ந்திருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் நீண்டகால வெளிப்புற ஆன்லைன் கேமிங் அமர்வுகளில் இருந்து மேகாலயாவின் புதிய மலேரியா கவலைகள் எழுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில், சிறந்த இன்டர்நெட் இணைப்புக்கான அணுகல், இளைஞர்களை இவ்வாறு வனப் பிராந்தியங்களை ஒட்டி அனுப்புவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக கரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள பல இளைஞர்கள், அதிக விழிப்புணர்வோடு இருக்கும் மூத்த தலைமுறையினரை விட தங்களது ஆன்லைன் கேமிங் ஈடுபாடு காரணமாக கொசு கடிப்பதை மறந்து விடுகின்றனர். மலேரியாவுக்கு வித்திடும் கொசுக்கள் அங்கே சாதாரணம் என்ற போதும் சென்ற தலைமுறையினர் மத்தியில் கொசுக்கடிக்கு எதிராக பாரம்பரிய தடுப்பு நடவடிக்கைகள் அதிகம் இருந்தன. ஆனால் ஆன்லைன் கேமிங்கில் தங்களை மறக்கும் இந்த தலைமுறை இளைஞர்கள் எளிதில் கொசுக்கடிக்கும் அவை பரப்பும் மலேரியாவுக்கும் ஆளாகிறார்கள்.

"மலேரியா நோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை விளைவிக்கும். மேகாலயாவில் வரலாற்று ரீதியாக பல இறப்புகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனால் இடையில் கட்டுபடுத்தப்பட்டிருந்த மலேரியா இறப்புகள் தற்போது இரட்டை இலக்கத்துக்கு எகிறியுள்ளன. இது உண்மையில் கவலைக்குரியது” என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

மலேரியா ரத்தப்பரிசோதனை
மலேரியா ரத்தப்பரிசோதனை

இதனையடுத்து ஊருக்குள் இணைய சேவையை அதிகரிப்பது முதல் கொசுவலைகளை வழங்குவது வரை அரசு சார்பில் புதிய திட்டங்கள் நீண்டுள்ளன. இனியேனும் மலேரியா பாதிப்புக்கு ஆளாகாது மேகாலயா இளைஞர்கள் ஆன்லைன் கேமிங்கில் திளைத்திருப்பார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in