உயிர் குடிக்கும் ஆன்லைன் ரம்மி: கோவையில் இன்னொரு இளைஞர் தற்கொலை

ரம்மி விளையாட்டு
ரம்மி விளையாட்டுhindu கோப்பு படம்

கோயம்புத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் பிஎஸ்சி ஐடி படித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர், செல்போனில் தொடர்ந்து விளையாடி பணத்தையும் இழந்துள்ளார்

மேலும் தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் தலைவலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in