வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்; முதலீடு செய்து 12 லட்சத்தை இழந்த தூத்துக்குடி நபர்: சிக்கிய திருவள்ளூர் வாலிபர்

வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்; முதலீடு செய்து 12 லட்சத்தை இழந்த தூத்துக்குடி நபர்: சிக்கிய திருவள்ளூர் வாலிபர்

வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை க்ளிக் செய்த தூத்துக்குடி நபரிடம் இருந்து 12 லட்சத்தை மோசடி செய்த திருவள்ளூர் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48). இவரது முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12 லட்சத்து 10 ஆயிரத்து 740 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் மற்றும் வசந்தகுமார் உட்பட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ராமரை மோசடி செய்த கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பவர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மற்றொரு குற்றவாளியான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால் (38) என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் வைத்து தனிப்படையினர் கைது செய்தர். அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in