நிபா வைரஸ்: கேரளாவில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்; பொது நிகழ்ச்சிகளுக்கு தடை!

நிபா வார்டு
நிபா வார்டு

கேரளாவில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கோழிக்கோடடில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொது நிகழ்ச்சிகளுக்கு செப்.24ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிபா வைரஸ் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைதுது கல்வி நிலையங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்கலைக்கழக தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன்.
முதல்வர் பினராயி விஜயன்.

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுமாறு பள்ளிகளுக்கு கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜய் தலைமையில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது செப்.24ம் தேதி வரை பொதுநிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் இருக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் திருமணம் போன்ற தவிர்க்க முடியாத சுபநிகழ்ச்சிகளை குறைந்தபட்ச பங்கேற்பாளர்களுடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோடு பகுதியில் ஆய்வு
கோழிக்கோடு பகுதியில் ஆய்வு

சென்னை ஐசிஎம்ஆரில் இருந்து 2 நிபுணர்கள், கோழிக்கோடு வந்துள்ளனர். புணேவில் உள்ள என்ஐவியில் இருந்து மற்றொரு நிபுணர் குழு கோழிக்கோடு இன்று வருகிறது.

இந்த மாவட்டத்தில் மாதிரிகளை விரைவாக பரிசோதிக்க வசதியாக பிஎஸ்எல் லெவல்3 ஆய்வகம் அமைக்கப்படும் என்று தெரிகிறது. கோழிக்கோட்டில் 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in