செக்யூரிட்டியால் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை: 8 நாட்களுக்குப் பின் மீட்பு

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்செக்யூரிட்டியால் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை: 8 நாட்களுக்குப் பின் மீட்பு

செக்யூரிட்டியால் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பிப்.15-ம் தேதி ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போனது. அப்பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்த சுமேந்திரகுமார் சுகல்தாஸ் மண்டல் என்பவர் அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

அந்தக் குழந்தைக்கு அடிக்கடி விளையாட்டுக் காட்டும் செக்யூரிட்டி என்பதால், அவரிடம் பெற்றோர் குழந்தையைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் குழந்தையைக் கடத்திச் சென்றதால் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர், போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், தனது சொந்த ஊரான பிஹார் மாநிலம், பாகல்பூரில் சுமேந்திரகுமார் சுகல்தாஸ் மண்டல் குழந்தையுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், செக்யூரிட்டி சுந்திரகுமார் சுகல்தாஸ் மண்டலை கைது செய்தனர்.

அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீஸார், பெற்றோரிடம் நேற்று இரவு ஒப்படைத்தனர். சுமேந்திரகுமார் சுகல்தாஸ் மண்டல், எதற்காக அவர் ஒரு வயது குழந்தையைக் கடத்தினார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தப்பட்ட குழந்தை 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது பால்கர் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in