வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராமேஸ்வரம் நகரில் ஒரு வழிப்பாதை நாளை அமல்

வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராமேஸ்வரம் நகரில் ஒரு வழிப்பாதை நாளை அமல்

பன்முக கலாச்சாரம் தாக்கம் கொண்ட சர்வதேச புண்ணியதலமான ராமேஸ்வரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாள் மட்டுமின்றி, இதர நாட்களிலும்  ராமநாதசுவாமியைத் தரிசனம் தமிழகம் மட்டுமின்றி, வட மாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால், வாகனங்கள் அதிகரிப்பால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்  ராமேஸ்வரம் நகரை விட்டு  வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக,

பன்முக கலாச்சாரம் தாக்கம் கொண்ட சர்வதேச புண்ணியதலமான ராமேஸ்வரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாள் மட்டுமின்றி, இதர நாட்களிலும்  ராமநாதசுவாமியைத் தரிசனம் தமிழகம் மட்டுமின்றி, வட மாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால், வாகனங்கள் அதிகரிப்பால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்  ராமேஸ்வரம் நகரை விட்டு  வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில்  அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை  கூட்டம் சேர்மன் நாசர் கான் தலைமையில், நகராட்சி ஆணையர் கண்ணன், டிஎஸ்பி தனஞ்செயன் முன்னிலையில் இன்று (டிச.29) நடந்தது.

நாளை (டிச.30) முதல் தற்காலிகமாக ஒரு வழிப்பாதை அமல்படுத்துவதென முடிவு எடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் மக்கள் திருப்தி அடைந்தால், ஒரு வழிபாதை தொடர்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in