சீர்காழி, தரங்கம்பாடியைப் புரட்டிப்போட்ட மழையால் பெரும் பாதிப்பு: நிவாரணத்தொகையை 5 ஆயிரமாக வழங்க வேண்டுகோள்

சீர்காழி, தரங்கம்பாடியைப் புரட்டிப்போட்ட மழையால் பெரும் பாதிப்பு: நிவாரணத்தொகையை 5 ஆயிரமாக வழங்க வேண்டுகோள்

அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையை 5 ஆயிரம் ரூபாயக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்  கே.வி. இளங்கீரன் கூறுகையில், "சமீபத்தில் பெய்த தொடர்மழை மற்றும் ஒரேநாளில் அதிக அளவாக பெய்த 44 செ. மீ மழையால்  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரை ஓரமுள்ள சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட  பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் ஊர் முழுவதும் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் மூழ்கியது.  மேலும் டெல்டாவின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வீணாகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . 

கே.வி. இளங்கீரன்
கே.வி. இளங்கீரன்

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தங்க வேண்டிய  சூழல் உருவாகியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கியுள்ளார். மழையின் பாதிப்பினையும்,  மக்களின் சிரமங்களையும்  நேரடியாக கண்ட முதல்வர், நிவாரணமாக  சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடும்ப அட்டை  ஒன்றிற்கு  ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளார்.

பெரும்பாதிப்பு ஏற்பட்ட இப்பகுதி மக்களுக்கு நிவாரணத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திட வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in