ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை; அதிகாலையில் திரண்ட ஆயிரம் பெண்கள்: திணறிய ஜவுளிக்கடை ஊழியர்கள்!

ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை; அதிகாலையில் திரண்ட ஆயிரம் பெண்கள்: திணறிய ஜவுளிக்கடை ஊழியர்கள்!

ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை எனக் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை விளம்பரம் செய்ததைத் தொடர்ந்து, அந்த கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ். இந்த ஜவுளிக்கடை திறந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அதைக் கொண்டாடும் விதமாக, கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்குப் புடவை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை முதலே அந்த கடையில் ஆண்கள், பெண்கள் எனக் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், ஆண்கள் எனக் கடை வாயில் முன்பாக மக்கள் குவிந்தனர். கடை திறந்தபிறகும் அப்பகுதியில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறிக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in