ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி, மகேந்திரன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 சிறார்களும் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரைச் சேர்ந்த அபினேஷ் என்ற சிறுவன் அதே ஊரில் உள்ள மீன் குட்டையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்துக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in